விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி வருகிற 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாலர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: திமுக ஆட்சிக்கு வநதால் மதுவிலக்கை அமுல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே கலைஞர் அறிவித்திருந்தார். ஆனாலும், தமிழகம் முழுவதும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்தி பெண்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் திரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு முன்பகா மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே ஒருமித்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் திமுக சார்பில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 10 மணிக்கு தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம்தென்னரசு உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.